தமிழ் மூலிகை மருத்துவத்தின் மகத்துவம் கூறும் வலைத்தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

சரஹா ஒரு ஆப்பு அவதானமாக பயன்படுத்தவும்...!

சரஹா ஒரு ஆப்பு அவதானமாக பயன்படுத்தவும்...!

சமூக வலைத்தளத்தில் காலத்துக்கு காலம் ஒவ்வொரு விடயம் பிரபலமாகும். அவ்வாறு அண்மைய நாட்களில் மிகவும் பிரபலமடைந்தது சரஹா என்னும் அப்பிளிக்கேஷன்.


இதில் உங்கள் அடையாளத்தை மறைத்து கொண்டு மற்றவர்களுக்கு செய்திகளை அனுப்ப முடியும். சிலர் இதை மொட்டை கடதாசி எனவும் அழைத்து கொண்டனர்.


சரஹா மூலம் மற்றவர் பற்றிய அபிப்பிராயத்தை நேர்மையாக பகிர்ந்து கொள்ள முடியும் என்பதே இந்த அப்ளிகேசனின் சிறப்பியல்பு.


ஆனால் சரஹா மொபைல் அப்ளிகேசன் செய்யும் திருட்டு வேலை அம்பலமாகியுள்ளது. இந்த அப்ளிகேஷனை ஒரு பயனர் லாகின் செய்ததுமே அந்த மொபைலில் உள்ள தகவல்களை திருடி சரஹா நிறுவன சேர்வர்களில் சேமிப்பது பற்றிய உண்மை வெளிவந்துள்ளது.


இந்த உண்மையை அம்பலப்படுத்தியவர் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ பிஷப்பாக்ஸ் இணையப்பாதுகாப்பு நிறுவனத்தில் பணியாற்றும் சக்கரி ஜூலியன் என்னும் அதிகாரியாவார்.


அவர் இது பற்றி கூறுகையில்,சரஹா அப்ளிகேசன் ஆண்ட்ரோய்ட் இயங்கு தளத்தில் சேமிக்கப்பட்டுள்ள மொபைல் இலக்கம் , ஈமெயில் முகவரிகள் போன்றவற்றை களவாடி கம்பனி சேர்வரில் சேமித்து கொள்கிறது என தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் அவதானம் தேவை என வலியுறுத்தப்பட்டுள்ளது.

|