4GB RAM, டூயல் பிரைமரி கேமரா அழகான அம்சங்களுடன் Samsung Galaxy J7 Plus

சாம்சங் நிறுவனம் 4 GB RAM, டூயல் பிரைமரி கேமரா அம்சங்களுடன் அழகான சாம்சங் கேலக்ஸி ஜெ7பிளஸ் எனும் புதிய மாடல் மொபைலை அறிமுகம் செய்யவுள்ளது.
Galaxy J7 Plus ஸ்மார்ட்போன்களில் 4 ஜிபி ரேம் திறனுடன் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்துடன் இரட்டை கேமரா வசதியுடன் 5.5 இன்ச், 3000 ஆம்பியர் திறன் கொண்ட பேட்டரி என பல சிறப்பம்சங்களுடன் புதிய மொபைல் வெளிவரவுள்ளது.
ஆக்டாகோர் பிராசஸர் மற்றும் பின்பக்கத்தில் உள்ள இரட்டை கேமிரா 13 மெகாபிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல் திறன் உடையது. செல்ஃபி பிரியர்களை கவரும் விதமாக முன்பக்கம், 16 மெகாபிக்சல் திறன் கொண்ட கேமராவுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் கூகுள் அசிஸ்டண்ட் போன்று இதில் சாம்சங் நிறுவனத்தின் பிரத்யேக ஆப்ஸ் ஆன பிக்ஸ்பி வாய்ஸ் அசிஸ்டண்ட் என்ற புதிய ஆப்பும் மொபைலில் பதவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.