தமிழ் மூலிகை மருத்துவத்தின் மகத்துவம் கூறும் வலைத்தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தல தோனியின் பொறுமையால் அபார வெற்றி இந்தியா!!

தல தோனியின் பொறுமையால் அபார வெற்றி இந்தியா!!

இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில்  இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி இலங்கையுடன் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.


இதில் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது ஒருநாள்  போட்டி பல்லகலேவில் இன்று நடைபெற்றது.


இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 9  விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்தது.


இதனையடுத்து 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தவான் 5, கோஹ்லி 3, ராகுல் 17 மற்றும் கேதர் ஜாதவ் 0 என அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து ஏமாற்றம் கொடுத்தனர்.


அடுத்ததாக களமிறங்கிய தோனி மறுமுனையில் தனி ஒருவனாக போராடிய ரோஹித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்து பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டார்.


இந்த ஜோடியை பிரிக்க இலங்கை வீரர்கள் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தது.


இதனால் கோபமடைந்த இலங்கை ரசிகர்கள் இந்திய அணியின் வெற்றிக்கு 8 ரன்கள் தேவை என்றபோது திடீரென மைதானத்திற்குள் தண்ணீர் பாட்டில்களை வீசி எறிய தொடங்கினர், இதனால் போட்டி சிறிது நேரம் தடை பட்டது.


சற்று நேரம் கழித்து மீண்டும் போட்டி துவங்கிய சிறிது நேரத்தில் இந்திய அணி இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.


ரோஹித் சர்மா 124 ரன்களுடனும், தோனி 67 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.


இதன் மூலம் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

|