தமிழ் மூலிகை மருத்துவத்தின் மகத்துவம் கூறும் வலைத்தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

அமெரிக்கவில் விவேகத்தை முந்தியதா மெர்சல்..?

அமெரிக்கவில் விவேகத்தை முந்தியதா மெர்சல்..?

தேனாண்டாள் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் எ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன், வடிவேலு மற்றம் பலர் நடித்துள்ள ‘மெர்சல்’ படத்தின் அமெரிக்க வினியோக உரிமை சுமார் 3.5 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இது, ‘விவேகம்’ படத்தின் மொத்த அமெரிக்க வசூல் தொகை என்கிறார்கள். அமெரிக்காவில் ‘விவேகம்’ படம் எதிர்பார்க்கப்பட்ட வசூலைத் தரவில்லை என்பதுதான் உண்மை.


அதனால், விஜய் நடித்து வெளிவரும் ‘மெர்சல்’ படத்தின் வியாபாரம் பாதிக்கப்படும் என்றும் சிலர் சொல்லி வந்த நிலையில் ‘மெர்சல்’ படத்தின் அமெரிக்க வினியோக உரிமை இவ்வளவு பெரிய விலைக்கு விற்கப்பட்டிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.அஜித்தை விடவும் வெளிநாடுகளில் விஜய்யின் படங்களுக்கு வரவேற்பு அதிகம். மேலும், இந்தப் படத்திற்கு வெளிநாடு வாழ் இந்தியர்களின் அபிமான இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருப்பதாலும், 

படம் தீபாவளிக்கு வெளியாகிறது என்பதாலும் அனைவரும் உற்சாகமாக வந்து பார்ப்பார்கள் என்ற நம்பிக்கையில் அவ்வளவு விலை கொடுத்து வாங்கியிருக்கிறார்கள் என்று தெரிகிறது.

|