தமிழ் மூலிகை மருத்துவத்தின் மகத்துவம் கூறும் வலைத்தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

மனம் மாறிய ஓவியா...ஆரவின் மீதான காதல் பிரிவா..?

மனம் மாறிய ஓவியா...ஆரவின் மீதான காதல் பிரிவா..?

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ஆரவை முழுமையாக காதலிப்பதாவும், அவருக்காகவே காத்திருப்பதாகவும் தெரிவித்திருந்த நடிகை ஓவியா, தற்போது தான் சிங்கிள் எனவும், அதுவே திருப்தி அளிக்கும் வகையில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.


சினிமாவில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்ததை விட, பிக்பாஸ் என்ற ஒற்றை நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களின் நெஞ்சில் இடம்பிடித்தவர் நடிகை ஓவியா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவரின் யதார்த்தமான செயல்பாடுகள், நாளுக்கு நாள் அவருக்கான ரசிகர்களின் எண்ணிக்கையை கூட்டியது. இடையில் பிக்பாஸ் வீட்டில் சகபோட்டியாளரான ஆரவ் மீது அவர் கொண்ட காதலால் சிறிது சோர்வடைந்து காணப்பட்ட ஓவியா, தானாகவே நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.


நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய ஓவியாவிடம், “இப்போதும் நீங்கள் ஆரவை உண்மையாக காதலிக்கிறீர்களா..? அவர் உங்களுக்கு சரியான மேட்ச் மாதிரி இல்லையே” என ரசிகர்கள் சரமாரியாக கேள்வி கேட்க, “என் மனது எது சொல்கிறதோ அதனையே சரி என நினைத்து செய்வேன். நேற்று வரை ஒருவரை உண்மையாக காதலித்து விட்டு உடனடியாக அவரை மறப்பது என்பது எனக்கு முடியாத காரியம். இப்போதும் ஆரவைத் தான் முழுமையாக காதலிக்கிறேன். அவருக்காகத் தான் காத்திருக்கிறேன்" என பதிலடி கொடுத்தார்.


பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரவ் தற்போதும் தொடரும் நிலையில் ஓவியா, ரசிகர்களுக்கு ஷாக் அளிக்கும் விதமாக புது ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ரிலேஷன் ஷிப்பில், சிங்கிள் எனக் குறிப்பிட்டுள்ள அவர், அதுவே திருப்தியளிப்பதாகவும் கூறியுள்ளார். ஆரவ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின் ஓவியா - ஆரவ் திருமணம் நடைபெறும் என எதிர்பார்த்த நிலையில் ஓவியா ட்வீட், அவரது ரசிகர்களுக்கு நிச்சயம் எதிர்பார்க்காத ஷாக் தான்.

|