தமிழ் மூலிகை மருத்துவத்தின் மகத்துவம் கூறும் வலைத்தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

ஓவியா மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லப் போகிறாரா?

ஓவியா மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லப் போகிறாரா?

தனியார் தொலைக்காட்சியொன்று நடத்திவரக்கூடிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனது இயல்பான, சுதந்திரமான மனிதம் நிறைந்த குழந்தைத்தனமான செயல்பாடுகளால் அதிகப்படியான இரசிகர்களைப் பெற்றவர் நடிகை ஓவியா.


ஓவியாவின் உண்மையான செயற்பாடுகளால் திரைத்துறையிலும், பொதுமக்கள் மத்தியிலும் அதிகப்படியான ஆதரவையும் பெற்றவர். கடந்த சில வாரங்களுக்கு முன் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பிறகும் ஓவியாவுக்கு ரசிர்கர்களின் ஆதரவு குறையவில்லை. நிகழ்ச்சியும் முன் போல பார்வையாளர்களை பெறவில்லை.


இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள ப்ரோமோவில் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய ஜூலி, பரணி, சக்தி, ஆர்த்தி உள்ளிட்ட அனைவரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வரவுள்ளதாக காட்டப்படுகிறது.


இறுதியாக, ஓவியா வரவுள்ளாரா என ரசிகர்கள் ஆவலுடன் ஓவியாவின் பெயரை ஆரவாரமாக உச்சரிக்கையில், சஸ்பென்ஸ் வைத்து முடிகிறது அந்த ப்ரோமோ.


ஒருவேளை, ஓவியாவின் வருகை நிகழ்ந்தால் பிக் பாஸ் நிகழ்ச்சி மீண்டும் சூடு பிடிக்க கூடும்.


மகிழ்ச்சியில் இரசிகர்கள்

|