தமிழ் மூலிகை மருத்துவத்தின் மகத்துவம் கூறும் வலைத்தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

முதல் நாளில் கபாலியை முறியடித்த விவேகம்!

முதல் நாளில் கபாலியை முறியடித்த விவேகம்!

விவேகம்’ படம் முதல் நாளில் புதிய வசூல் சாதனையை படைத்துள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


மிகப் பெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்துள்ள இப்படத்திற்கு இரு விதமான விமர்சனங்கள் வந்துள்ளன.அஜித் ரசிகர்களுக்குப் படம் திருப்தியைத் தந்துள்ளது. மற்ற ரசிகர்களுக்குப் படம் சுமாராகத்தான் இருக்கிறது.இருந்தாலும் இன்று இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 22 கோடி வரை வசூலித்திருக்கலாம் என தகவல்கள் வந்துள்ளது.


மற்ற மாநிலங்களில் வெளிநாடுகளின் வசூலைச் சேர்த்தால் சுமார் 30 கோடி வரை வந்திருக்கலாம்.தமிழ்நாடு வசூலைப் பொறுத்தவரையில் ‘கபாலி’ படத்தின் முதல் நாள் வசூலான 21.5 கோடி ரூபாய் சாதனையை 22 கோடி வசூலித்து ‘விவேகம்’ முறியடித்துள்ளது என்கிறார்கள்.


அடுத்த மூன்று நாட்களில் இப்படத்தின் வசூல் இன்று போலவே இருந்தால் நான்கு நாட்களில் 100 கோடி ரூபாயைக் கடக்கவும் வாய்ப்புள்ளது.நாளை முதல் மேலும் பல வசூல் விவரங்கள் வெளியாகலாம்.

|