உளுந்து களி

தேவையான பொருள்கள்
பச்சரிசி - 1 கப்
கருப்பு உளுந்து - 1 கப்
கருப்பட்டி - 1 கப்
நல்லெண்ணெய் - 1 குழம்பு கரண்டி அளவு
தேங்காய் துறுவல் - அரை கப்
செய்முறை
1) அரிசி உளுந்து இரண்டையும் அரைத்து கொள்ளவும்.
2) கருப்பட்டியை பொடிச்சு, அரை கப் தண்ணிவிட்டு கொதிக்க வைத்து வடிகட்டி ஆற வைக்கவும்.
3) அகலமான வடசட்டியில் மாவை கொட்டி அதனுடன் கருப்பட்டி தண்ணீர் மற்றும் தேங்காய் துறுவல் சேர்த்து அதனுடன் மேலும் 1கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கி வைத்து விட்டு பின்பு அந்த கலவையை அடுப்பில் வைத்து கட்டி விழாமல் நன்கு கிளர வேண்டும்.
4) தீயை மிதமா வெச்சு சிறிது சிறிதா நல்லெணய் சேர்த்து ஐந்து நிமிஷத்துக்கு கிளறவும்.
5) மாவு திரண்டு அல்வா பதத்திற்கு வரும்போது இறக்கவும்.
பெண் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. மாதவிடாய் காலத்தில் முதுகு வலி வராது.எலும்புக்கு மிகவும் நல்லது.
தகவல் - samayalkurippu.com