கறிவேப்பிலை கெட்டிக் குழம்பு செய்யும் முறை!

தேவையான பொருள்கள்
கறிவேப்பிலை – 2 கப்
சின்ன வெங்காயம் – 1 கப்
பச்சை மிளகாய் – 3
இஞ்சி – 5 கிராம்
பூண்டு – 5 கிராம்
சோம்பு – சிறிது
நல்லெண்ணெய் – 25 மில்லி
கடுகு – சிறிது
முந்திரி – 20 கிராம்
வெந்தயம் – 5 கிராம்
தக்காளி (அரைத்தது) – 1 கப்
மஞ்சள் தூள் – சிறிது
புளித் தண்ணீர் – 1 கப்
தனியா – 10 கிராம்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
1) இஞ்சி, பச்சை மிளகாய், சீரகம், கறிவேப்பிலை, சோம்பு, சின்ன வெங்காயம், கடுகு, முந்திரி இவையனைத்தையும் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி நன்றாக வதக்கவும்.
2) அதைச் சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும்.
3) ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அதில் கடுகு, சோம்பு, வெந்தயம் சேர்த்து வதக்கவும்.
4) பின்னர் அதில் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
5) வதங்கியபின் அதில் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் மற்றும் வறுத்து அரைத்து வைத்த மல்லியையும் சேர்த்து வதக்கவும்.
6) புளித் தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும்.
7) பிறகு, அரைத்து வைத்த கலவையைச் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைக்கவும்.
இறுதியில், உப்பு சேர்த்து இறக்கினால், கறிவேப்பிலை கெட்டிக் குழம்பு ரெடி.