தமிழ் மூலிகை மருத்துவத்தின் மகத்துவம் கூறும் வலைத்தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

வல்லாரை கீரை தோசை செய்யும் முறை!

வல்லாரை கீரை தோசை செய்யும் முறை!

தேவையான பொருட்கள் 


(பொடியாக நறுக்கிய) வல்லாரை கீரை - 1 கப்

பச்சைமிளகாய் - 1

தோசை மாவு - 1 கப்

சீரகம் - 1 தேக்கரண்டி

உப்பு, எண்ணெய் - தேவைக்கு


செய்முறை 


1) அலசி வைத்துள்ள கீரையை பொடியாக நறுக்கி பச்சைமிளகாய், சீரகம், உப்பு சேர்த்து மிக்சியில் அரைக்கவும். 


2) தோசை மாவில் அரைத்த கீரையை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.


3) இந்த மாவை தோசையாக ஊற்றி எண்ணெய் ஊற்றி எடுத்தால் ஆரோக்கியமான வல்லாரை கீரை தோசை ரெடி.


சிறிய வடிவ காசு வடிவத்தில் சிறிதாக மாவை ஊற்றி நெய் சேர்த்த இந்த தோசையை குழந்தைகளுக்கும், பள்ளி செல்லும் மாணவ-மாணவிகளுக்கும் சிற்றுண்டிகளாக கொடுக்கலாம். இவ்வாறு செய்தால் ஆரோக்கிய முறையில் குழந்தைகளுக்கு ஞாபக சக்தியை மேம்படுத்த உதவும்.


தகவல் - www.dinakaran.com

|