தேங்காய் பழ பஞ்சாமிர்தம்!

பழனி பஞ்சாமிர்தம் பற்றிக் கேள்விப்பட்டு இருப்பீர்கள். பெருமாள் கோயில்களில் தேங்காய் பழ பஞ்சாமிர்தத்தால் பெருமாளுக்கு அபிஷேகம் செய்வார்கள். பிரசாதமாக உண்ணும்போது அதன் சுவையே அலாதிதான்! விசேஷங்களின் போது வீட்டில் நிறைய பழங்கள் மீந்துவிட்டால், ஊட்டச்சத்து மிகுந்த இந்த பஞ்சாமிர்தத்தை செய்து பாருங்களேன்!
தேவையான பொருட்கள்
ஆப்பிள் - 2
ஆரஞ்சு - 2
சாத்துக்குடி - 2
மாம்பழம் - 2
மாதுளை - 1
விதையில்லாத பேரீச்சை - 100 கிராம்
பச்சை திராட்சை - 100 கிராம்
பன்னீர் (கருப்பு) திராட்சை - 100 கிராம்
மலை வாழைப்பழம் அல்லது ரஸ்தாளி - 3 அல்லது 4
கட்டிக் கற்கண்டு - 100 கிராம்
தேன் - 50 கிராம்
நெய் - 1 மேசைக்கரண்டி
சிறிய தேங்காய் - 1 (துருவியது)
செய்முறை
1) பழங்களை நன்கு கழுவவும். ஆரஞ்சு, சாத்துக்குடியைத் தோலுரித்து, விதை நீக்கி, சுளைகளை எடுத்துக் கொள்ளவும். மற்ற பழங்களை நறுக்கிக் கொள்ளவும்.
2) கற்கண்டை பொடித்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.
3) எல்லா பழங்களையும் கலந்து, தேன், கற்கண்டு, துருவிய தேங்காய், நெய் சேர்த்து கலக்கவும்.
நைவேத்தியத்திற்கு தேங்காய் பழ பஞ்சாமிர்தம் தயார்.
குறிப்பு
நைவேத்தியத்திற்கு மேலே குறிப்பிட்ட பழங்களும், கற்கண்டு அல்லது வெல்லத்தூள் மட்டுமே சேர்க்கப் படுகின்றது. மற்றபடி வேறு பழங்களும் சர்க்கரையும் சேர்க்கலாம்.
தகவல் - www.dinakaran.com