தமிழ் மூலிகை மருத்துவத்தின் மகத்துவம் கூறும் வலைத்தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

வெனிலா கேக் (முட்டை சேர்க்காத‌ வெனிலா கேக்) எப்படி செய்யலாம்?

வெனிலா கேக் (முட்டை சேர்க்காத‌ வெனிலா கேக்) எப்படி செய்யலாம்?

தேவையான பொருட்கள்


மைதா – முக்கால் கப்

சர்க்கரை – அரை கப்

தயிர் – அரை கப் (ரூம் டெம்பெரேச்சர்)

வெனிலா எசன்ஸ் – ஒரு தேக்கரண்டி

எண்ணெய் – கால் கப்

பேக்கிங் பவுடர் – முக்கால் தேக்கரண்டி

பேக்கிங் சோடா – கால் தேக்கரண்டி


செய்முறை


1) தயிருடன் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும்.


2) சர்க்கரை நன்றாக கரைந்ததும் பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் சேர்த்து கலக்கவும்.


3) கலவை நன்கு நுரைத்து வரும்போது எண்ணெய் மற்றும் வெனிலா எசன்ஸ் சேர்க்கவும்.


4) அதனுடன் சலித்த மைதா மாவை சிறிது சிறிதாக கொட்டி கலந்து கொள்ளவும்.


5) ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தடவி மாவுக் கலவையை அதில் ஊற்றவும்.


6) மாவு கலவை உள்ள பாத்திரத்தை குக்கரில் வைத்து மூடி சிறு தீயில் 30 நிமிடங்கள் வேக வைக்கவும். (குக்கரில் தண்ணீர் ஊற்றாமல், கேஸ்கட் மற்றும் விசில் போடாமல் வைக்கவும். மணல் பரப்பி வைக்கும் முறையிலும் இதே போல் வைக்கலாம்). 


7) 15 நிமிடங்கள் கழித்து ஒருமுறை திறந்து பார்த்துக்கொள்ளலாம். உள்ளே வைக்கும் பாத்திரம் அலுமினியமாக இருந்தால் நல்லது.


சுவையான முட்டை இல்லாத சாஃப்ட் வெனிலா கேக் தயார்!


தகவல் - www.tamilserialtoday.org

|