தமிழ் மூலிகை மருத்துவத்தின் மகத்துவம் கூறும் வலைத்தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

புளிப்பு கார வடை செய்யும் முறை!

புளிப்பு கார வடை   செய்யும் முறை!

தேவையான பொருட்கள் 


கடலைப்பருப்பு - அரை கப்

துவரம்பருப்பு - அரை கப்

உளுத்தம்பருப்பு - கால் கப்

பச்சரிசி - கால் கப்

காய்ந்த மிளகாய் - 8

புளி - சிறிய உருண்டை

பெருங்காயம் - அரை தேக்கரண்டி 

தேங்காய் துருவல் - கால் கப்

உப்பு - ருசிக்கேற்ப

எண்ணெய் - தேவையான அளவு


செய்முறை


1) பருப்பு, அரிசி வகைகளை ஒன்றாக ஊறப் போடுங்கள். அதனுடன் மிளகாயையும் சேர்த்து ஊறவிடுங்கள். 


2) ஒரு மணி நேரம் ஊறியதும் புளி, தேங்காய் துருவல், உப்பு, பெருங்காயம் சேர்த்து கரகரப்பாக அரைத்து, ஒரு மேசைக்கரண்டி எண்ணெயைக் காய வைத்து கடுகை பொரித்து கொட்டி கலந்துகொள்ளுங்கள். 


3) எண்ணெயைக் காய வைத்து சிறு சிறு வடைகளாக போட்டு நன்கு வேக விட்டு எடுங்கள். 


புளிப்பும் காரமும் சேர்ந்து ருசியாக இருக்கும் இந்த வித்தியாசமான வடை. 


தகவல் - nasrullah.in

|