தமிழ் மூலிகை மருத்துவத்தின் மகத்துவம் கூறும் வலைத்தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

இனிப்பு சோளம் சூப் எப்படி செய்யலாம்?

இனிப்பு சோளம் சூப் எப்படி செய்யலாம்?

தேவையான பொருட்கள் 


பதப்படுத்தப்பட்ட சோளம் - 1 டப்பா

வெஜிடபிள் ஸ்டாக் (காய்கறி வேகவைத்த தண்ணீர்) - 1 லிட்டர்

வெண்ணைய் - 1 மேசைக்கரண்டி

பால் -1 கோப்பை

தேவையானால் முட்டை -  1

அஜினோ மோட்டோ - 1/2 தேக்கரண்டி

மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி

மைதா மாவு  - 1 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு


செய்முறை 


1) வெண்ணையை அடுப்பில் வைத்து உருக்கிக்கொள்ளவும்.  


2) வெண்ணைய் உருகியவுடன், மைதா மாவு சேர்த்து 1 நிமிடம் வரை வறுக்கவும்.  


3) பால், மக்காச் சோளத்தையும், வெஜிடபிள் ஸ்டாக்கையும் (காய்கறி வேகவைத்த தண்ணீர்) சேர்க்கவும். உப்பு, மிளகுத்தூள்  சேர்க்கவும். 


4) சூப் இரண்டு கொதி வந்தவுடன் தேவையானால் முட்டை சேர்க்கவும். முட்டையை உடைத்து மெதுவாக விடவும்.


5) சூப்பை சுமார் 10  நிமிடம்வரை கொதிக்க விடவும்.  அஜினோ மோட்டொவைச் சேர்க்கவும். 


சூப்பை வடிகட்டாமல் சூடாகப் பரிமாறவும்.  


தகவல் - suriyantv.com

|