தமிழ் மூலிகை மருத்துவத்தின் மகத்துவம் கூறும் வலைத்தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

சீரக ரசம் எப்படி செய்வது?

சீரக ரசம் எப்படி செய்வது?

தேவையான பொருட்கள் 


துவரம்பருப்பு, சீரகம், நெய், கடுகு - தலா ஒரு தேக்கரண்டி 

மிளகு - அரை தேக்கரண்டி 

காய்ந்த மிளகாய் - 2

புளி - பாதி எலுமிச்சம்பழம் அளவு

கறிவேப்பிலை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு


செய்முறை


1) ஒரு பாத்திரத்தில் புளி, உப்புடன் இரண்டு கப் தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும். 


2) துவரம்பருப்பு, சீரகம், காய்ந்த மிளகாய், மிளகு, கறிவேப்பிலையை மிக்ஸியில் கரகரப்பாக பொடிக்கவும். 


3) புளித் தண்ணீர் கொதித்தவுடன், பொடித்து வைத்திருக்கும் மசாலா பொடியை அதில் சேர்த்து, நுரைத்துப் பொங்கி வரும்போது இறக்கவும்.


4) கடாயில் நெய் விட்டு கடுகு தாளித்து, ரசத்தில் கொட்டிக் கலந்து பரிமாறவும்.


தகவல் - groups.google.com

|