தமிழ் மூலிகை மருத்துவத்தின் மகத்துவம் கூறும் வலைத்தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

கருப்பட்டி பணியாரம் எப்படி செய்வது?

கருப்பட்டி பணியாரம் எப்படி செய்வது?

தேவையான பொருட்கள் 


கருப்பட்டி - 200 கிராம்

கேழ்வரகு மாவு, அரிசி மாவு - தலா ஒரு கப்

ஏலக்காய்த்தூள் - சிறிதளவு

தேங்காய் துருவல் - 4 தேக்கரண்டி

எண்ணெய் - 100 மில்லி


செய்முறை


1) கருப்பட்டியை நன்கு பொடித்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டி, கேழ்வரகு மாவு, அரிசி மாவுடன் கலந்து, ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் சேர்த்து கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். 


2) பணியாரக் கல்லில் எண்ணெய் தடவி, மாவை சிறு கரண்டியால் எடுத்து ஊற்றி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.


குறிப்பு


கிராமங்களில் வெல்லம், சர்க்கரைக்குப் பதில் கருப்பட்டியை காபி, டீ, பலகாரம் என இனிப்பு வகைகளுக்கு பயன்படுத்துவது இன்றும் வழக்கத்தில் உள்ளது.


தகவல் - vasukimahal.blogspot.ca

|