தமிழ் மூலிகை மருத்துவத்தின் மகத்துவம் கூறும் வலைத்தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தயிர் வடை செய்யும் முறை

தயிர் வடை  செய்யும் முறை

தேவையான பொருட்கள் 


உளுந்து - ஒரு கப்

பெருங்காயப் பொடி - கால் தேக்கரண்டி 

புளிக்காத கெட்டித் தயிர் - ஒரு கப்

பால் - கால் கப்

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு


அரைக்க 


பச்சை மிளகாய் - 2

இஞ்சி - ஒரு சிறு துண்டு

தேங்காய்த் துருவல் - கால் கப்

முந்திரிப் பருப்பு - 8

சீரகம் - அரை தேக்கரண்டி 


அலங்கரிக்க


சீரகப் பொடி, காரப் பொடி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, பூந்தி - சிறிதளவு


செய்முறை 


1) உளுத்தம் பருப்பைக் களைந்து அரை மணி நேரம் ஊறவையுங்கள். தண்ணீரை வடித்துவிட்டு நன்றாக அரையுங்கள். மாவு கெட்டியாக இருக்க வேண்டும். கடைசியில் உப்பு, பெருங்காயப் பொடி சேர்த்து எடுங்கள்.


2) அரைக்கக் கொடுத்துள்ளவற்றை நன்றாக அரைத்து, தேவையான உப்பு, தயிர் சேர்த்து மேலும் ஒரு சுற்று சுற்றியெடுங்கள். அதனுடன் பாலைச் சேருங்கள். 


3) அரைத்த உளுந்து மாவை வடைகளாகத் தட்டி சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள். 


4) அவற்றை வெதுவெதுப்பான நீரில் போட்டு உடனே எடுத்து, தயிர்க் கலவையில் போடுங்கள். ஊறியதும் எடுத்து வேறு தட்டில் வைத்து, அலங்கரிக்கக் கொடுத்துள்ளவற்றை வரிசையாகத் தூவிப் பரிமாறுங்கள். 


5) விரும்பினால் மேலே சாட் மசாலா தூவிக்கொள்ளலாம். 


6) தயிர் வடைகளை ஃப்ரிட்ஜில் வைத்தும் சாப்பிடலாம்.


தகவல் - www.tamilnews.cc

|