தமிழ் மூலிகை மருத்துவத்தின் மகத்துவம் கூறும் வலைத்தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

அன்னாசி அல்வா

அன்னாசி அல்வா

தேவையான பொருட்கள் 


நன்கு பழுத்த அன்னாசி - பாதி

சர்க்கரை - ஒன்றரை கிலோ

மைதா - 300 கிராம்

நெய் - 300 கிராம்

முந்திரி - 50 கிராம்

ஏலக்காய் தூள் - சிறிதளவு

மஞ்சள் - சிறிதளவு.


செய்முறை 


1) அன்னாசியை தோல் சீவி 1 சிறிய துண்டு மட்டும் தனியாக எடுத்து வைத்துக்கொண்டு, மற்றவற்றை மிக்சியில் அரைத்து ஜூஸ் எடுத்துக் கொள்ளுங்கள். எடுத்து வைத்ததை இன்னும் சிறிய துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள்.


2) மைதாவை நன்கு பிசைந்து மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி ஓர் இரவு வைத்திருந்து, மறுநாள் தண்ணீரை வடித்து விட்டு, கீழ்படிந்துள்ள மாவில் மீண்டும் தண்ணீர் ஊற்றிக் கலக்கி பாலெடுத்துக் கொள்ளுங்கள்.


3) மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி சர்க்கரையை பாகு காய்ச்சுங்கள். நூல் பதம் வரும்போது அதில் மைதா பால் ஊற்றிக் கிளறுங்கள். இடையிடையே நெய்யையும் வண்ணப்பொடியையும் சிறிது சிறிதாக சேர்க்க வேண்டும்.


4) எல்லாம் ஒன்றிவரும் போது அன்னாசி ஜூஸை ஊற்றி, ஏலக்காய் தூள், அன்னாசி துண்டுகளைக் கொட்டி கிளறுங்கள். கரண்டியில் ஒட்டாத அளவுக்கு நீர்த்தன்மை வற்றி வரும்போது முந்திரியை வறுத்துச் சேர்க்கவும். 


அன்னாசி அல்வா ரெடி!


|