தமிழ் மூலிகை மருத்துவத்தின் மகத்துவம் கூறும் வலைத்தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

பச்சைப்பயறு துவையல் செய்யும் முறை

பச்சைப்பயறு துவையல் செய்யும் முறை

தேவையான பொருட்கள் 


பச்சைப்பயறு - அரை கப்

பூண்டு - ஒரு பல்

இஞ்சி - சிறிய துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்)

தேங்காய் துருவல் - 3 மேசைக்கரண்டி 

காய்ந்த மிளகாய் - 5

புளி - கோலி அளவு

எண்ணெய் - ஒரு தேக்கரண்டி 

உப்பு - தேவையான அளவு 


செய்முறை


1) வெறும் வாணலியை சூடாக்கி, பயறை நன்கு வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும். 


2) பூண்டு, இஞ்சி, தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், புளி ஆகியவற்றை எண்ணெய் விட்டு தனியே வறுத்துக் கொள்ளவும். 


3) ஆறியபின், பயறு, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும்.


தகவல் - pettagum.blogspot.com

|