தமிழ் மூலிகை மருத்துவத்தின் மகத்துவம் கூறும் வலைத்தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

பூண்டு முறுக்கு எவ்வாறு செய்வது?

பூண்டு முறுக்கு எவ்வாறு செய்வது?

தேவையான பொருட்கள்


அரிசி - 1 1/2 கப்

பூண்டு - 2 பல்

பச்சை மிளகாய் - 4

கறிவேப்பிலை - சிறிது,

உப்பு, நீர் - தேவையான அளவு 

எண்ணெய் - 1/4 லிட்டர் (பொரிக்க)


செய்முறை


1) மேற் கூறிய பொருட்களுடன் சிறிதளவு நீர் சேர்த்து திரிக்கவும். 


2) இதை அரிசி மாவு கலந்து தேவைக்கேற்ப நீர் சேர்த்து மாவாக பிசையவும். 


3) ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறிதளவு பிசைந்த மாவை தேன் குழல் முறுக்கு அச்சில் பிழிந்து எண்ணெயில் இட்டு பொன்னிறமாக முறுகலாக பொரித்து எடுக்கவும். 


4) அனைத்து மாவையும் இதே போல் பொரித்து காற்று புகாத டப்பாவில் அடைத்து வைத்தால் 15 நாட்கள் கெடாமல் சுவையாக இருக்கும்.


தகவல் - dailytamizh.blogspot.com

|