தமிழ் மூலிகை மருத்துவத்தின் மகத்துவம் கூறும் வலைத்தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக அமைத்துக் கொள்ள செய்ய வேண்டியவை!

உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக அமைத்துக் கொள்ள செய்ய வேண்டியவை!

வாழ்க்கை என்பதே ஒரு அற்புதம் தான். உண்மைதான், மனிதனைப் பிறந்து அதில் எந்தக் குறை இன்றி நன்றாக இருப்பதே ஒரு பாக்கியம் தான். மனிதன் தன்னாலும் சம்பாதிக்க முடியும் என்று உணரும் நாட்கள். முதல் மாத சம்பளம் வாங்கும் பொழுது, மனிதன் படும் சந்தோஷங்களுக்கு அளவே கிடையாது. சம்பளத்தை எடுத்து தாயிடம் நீட்டும் போது, நானும் பெரியவன் ஆகிவிட்டேன் என்றொரு உள்ளுணர்வு. தாய்க்கோ என் பிள்ளை இவன், மிகப் பெரிய ஆளாக வருவான் என்றொரு உள்ளுணர்வு. பணத்தை பற்றி ஆயிரம் பேர் ஆயிரம் சொல்லலாம். ஆனால் பல இடங்களில், சந்தோஷம் வரக் காரணமே பணம் தான்.


 எல்லோருக்கும் அவரது தந்தை தான் தனது முதல் ஹீரோ. அவரைப் போலவே நடை உடை பாவனைகளை அமைக்க முயற்சிப்போம். சிறு வயதில், தாய் என்ற ஒரு அற்புத பந்தத்தையும் அறிமுகப் படுத்தி அதை உணரச் செய்வதும் வாழ்கை தான். பின்னர் துணை. ஆணாகட்டும், பெண்ணாகட்டும், தனக்கென்று ஒரு துணை, நீங்கள் என்ன மொக்கை ஜோக் சொன்னாலும் அதையும் கேட்டு சிரிக்க ஒரு ஆள் உங்கள் அருகே எப்போதும். புதிதாய் ஒரு உலகை உணர்வீர்கள். அந்த புன்னகை, ஸ்பரிசம், காதல், அன்பு, வம்பு, சண்டை, மன்னிப்பு, கண்ணீர், கோபம், அக்கறை, பாசம், நேசம், கண்டிப்பு, எல்லாவற்றையும் நன்றாக உணர்த்தக் கூடிய ஒரு பந்தம் தான் துணை. 


உங்களது வெற்றி, தோல்வி, இன்பம், துன்பம் அனைத்திற்கும் நீங்கள் தான் காரணம். நீங்கள் செய்த, செய்துக்கொண்டிருக்கும், செய்ய போகும் செயல்களின் பிரதிபலன் தான் உங்களது மகிழ்ச்சியும், இகழ்ச்சியும். சூழ்நிலைகள் வெறும் தளம் தான் அதில் உங்களது செயல்பாடு தான், உங்களுக்கான வெற்றி, தோல்வியை முடிவு செய்கிறது.


 உதாரணமாக கூற வேண்டுமானால், உலகம் முழுதும் பல கிரிக்கெட் மைதானங்கள் இருக்கின்றன. அவைகள் தான் சூழ்நிலைகள், அந்த மைதானத்தின் தன்மைக்கு ஏற்ப விளையாட வேண்டியது உங்கள் திறமை. சரியாக விளையாடினால் வெற்றி, இல்லையேல் தோல்வி. இது தான் உங்கள் வாழ்க்கையிலும் நடக்கிறது. இதில் எந்த மாதிரியான செயல்களில் (பயிற்சிகள்) நீங்கள் அதிகம் ஈடுபட்டால் வெற்றியும், மகிழ்சியும் அடைய முடியும் என்று இனி காண்போம்.


எதிர்மறை எண்ணங்களை கைவிடுங்கள்.


எந்த காரியம் தொடங்கும் முன்னரும், செய்துக்கொண்டிருக்கும் போதும். இது விளங்காது, நாம் வெற்றி பெறுவோமா? நம்மால் முடியாதே, என்ற எண்ணங்களை கைவிட்டாலே உங்களது வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகவும், வெற்றிகரமாகவும் இருக்கும். மற்றும் இது உங்கள் மனநிலையை மேலோங்க செய்ய உதவும்.


"நோ" சொல்லக் கற்றுக் கொள்ளுங்கள்.


 ஏற்கனவே மிகவும், பிஸியாக இருக்கிறீர்கள் என்றால், இன்னும் அதிக வேலை என்றால், "நோ" சொல்லுங்கள். உங்களுக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்கிக் கொள்ள வேண்டும்.


சூழ்நிலையை சமாளித்தல்.


 உங்கள் வாழ்கையில் பல்வேறு விதமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் நேரிடும். அந்த வேளைகளில், நீங்கள் தான் சூழ்நிலையை கையாள வேண்டுமே தவிர, அந்த சூழ்நிலை உங்களை கையாளும் வகையில் இருந்துவிட கூடாது. இதை சரியாக நீங்கள் செய்து வந்தாலே, உங்கள் வாழ்விலும், தொழிலும் நல்ல முன்னேற்றம் காணலாம்.


உடற்பயிற்சிகள்


உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டியது மிக மிக அவசியம். குறைந்தபட்சம் தினமும் காலை, மாலை வேளைகளில் நடைப்பயிற்சியிலாவது ஈடுபடுங்கள். இது உங்கள் உடல்நிலை மற்றும் மனநிலை ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும்.


குடும்பத்துடன் நேரம் செலவு செய்யுங்கள்.


உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கோளோடு நேரம் செலவழிக்க வேண்டியது அவசியம். ஏனெனில், இவர்கள் தான் உங்கள் மன அழுத்தம் மற்றும் சந்தோசத்திற்கான நற்மருந்து. எனவே, மாதம் ஒருமுறையாவது குடும்பம், நண்பர்களுடன் வெளியிடங்கள் அல்லது வெளியூர்களுக்கு சென்று வந்தாலே உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி வற்றாத ஜீவநதியாக ஓடிக்கொண்டிருக்கும்.


தகவல் - www.tamilkurinji.net

|