தமிழ் மூலிகை மருத்துவத்தின் மகத்துவம் கூறும் வலைத்தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

அக்கா, தங்கையுள்ள ஆண்களை பெண்கள் அதிகம் விரும்புவதற்கான காரணங்கள்!

அக்கா, தங்கையுள்ள ஆண்களை பெண்கள் அதிகம் விரும்புவதற்கான காரணங்கள்!

அக்கா, தங்கை உள்ள ஆண்கள் நிஜமாகவே வரம் பெற்றவர்கள் தான். அதனால் தான் சகோதரிகளை ஆண்களின் இரண்டாம் தாய் என கூறுகிறார்கள். தங்கையாக இருந்தாலும் சரி, அக்காவாக இருந்தாலும் சரி அதட்டுவது என்னவோ அவர்கள் தான்.


பாசம், நேசம், சண்டை, பெற்றோர்களிடம் ஒருவரை பற்றி மற்றொருவர் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்வது என சகோதர, சகோதரி இருக்கும் வீட்டில் அலப்பறைக்கு அளவே இருக்காது. இது பிடித்து போய் தான் என்னவோ சகோதரி இருக்கும் ஆண்கள் என்றால் கொஞ்சம் அதிகமாக விரும்புகிறார்கள் பெண்கள்.


அக்கா, தங்கையுள்ள ஆண்களை பெண்கள் அதிகம் விரும்புவதற்கு இது மட்டும் காரணம் அல்ல, இன்னும் பல இருக்கின்றன….


மகிழ்ச்சியானவர்கள்

சகோதரி இருக்கும் ஆண்களுக்கு மன அழுத்தம் குறைவாகதான் இருக்கிறது என அறிவியல் ரீதியாகவே ஊர்ஜிதம் செய்துள்ளனர். மற்றும் இவர்களது மகிழ்ச்சி அளவும் சகோதரி இல்லாத ஆண்களுடன் ஒப்பிடுகையில் அதிகமாக இருக்கிறது. மேலும், இவர்கள் பெண்களை மகிழ்ச்சிப்படுதுவதிலும் சிறந்து விளங்குகிறார்கள்.


பெண்களின் பிரச்சினைகள் 

இயற்கையாகவே பெண்களுக்கு உடல் ரீதியாக நிறைய பிரச்சினைகள் ஏற்படும். இவற்றை பற்றி சகோதரி இருக்கும் ஆண்கள் அறிந்து வைத்திருப்பார்கள். மேலும் எந்த நேரத்தில் அவர்களை தொந்தரவு செய்யாமல் இருக்க வேண்டும் என இவர்கள் அறிவர்.


தயக்கம் இருக்காது

பெண்களுடன் சகஜமாக பழகும் குணாதிசயங்கள் இவர்களுக்கு இருக்கும். தயங்குவது, அஞ்சுவது, சாதாரணமாக பேசினால் கூட அதை வேறு கோணத்தில் காண்பது போன்றவை இவர்களிடம் பெரியளவில் இருக்காது.


பெண்மை குணங்கள்

பெண்களுக்கென சில குணங்கள் இருக்கும் அடம்பிடித்து வேலை சாதிப்பது, டிவி பார்க்க சண்டையிடுவது, சிறிய விஷயங்களை கூட வியந்து பார்ப்பது என. இவற்றை எல்லாம் இவர்கள் முன்பே அறிந்திருப்பார்கள்


புரிந்துக் கொள்ளும் திறன்

பெண்களையும், பெண்மையையும் இவர்கள் எளிதாக புரிந்துக் கொள்வார்கள். எப்போது அறிவுரைக் கூற வேண்டும், எப்படி பாதுகாக்க வேண்டும் என்பதில் சிறந்து விளங்குவார்கள்.


பெண்களின் நேரம்

பெண்கள் எத்தனை மணிக்கு ரெடி ஆக ஆரம்பித்தால், எப்போது கிளம்புவார்கள், அவர்களுக்கான அந்த தனி நேர வித்தியாசங்கள் பற்றி இவர்கள் முன்கூட்டியே அறிந்திருப்பார்கள்.


எப்படி நடத்த வேண்டும்

மிக முக்கியமாக பெண்களை எப்படி நடத்த வேண்டும் என இவர்கள் அறிந்திருப்பார்கள். எந்த நேரத்தில் அவர்கள் சுபாவம் எப்படி மாறும் அதற்கு ஏற்ப அவர்களை எப்படி கையாள வேண்டும் என்பது இவர்களுக்கு கைவந்த கலை.


இலவசமாக ஓர் தங்கை

மேலும், பெண்கள் விரும்பும் ஆணுக்கு சகோதரி இருந்தால், இலவசமாக ஓர் தங்கை அல்லது அக்கா கிடைப்பார்கள். என்ன தான் குற்றம் குறை கூறிக் கொண்டாலும், பொழுதுபோக அரட்டை அடிக்க இவர்களுக்கு ஓர் துணையாக இருப்பார்கள்.


தகவல் - www.lovepannunga.com

|