தமிழ் மூலிகை மருத்துவத்தின் மகத்துவம் கூறும் வலைத்தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

குழந்தை பிறந்தவுடன் கவனிக்கவேண்டிய விஷயங்கள்!

குழந்தை பிறந்தவுடன் கவனிக்கவேண்டிய விஷயங்கள்!

பொதுவாக குழந்தை பிறக்கும் சமயத்தில் உங்களுக்கு துணையாக பெரியவர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு இங்கே குறிப்பிட்டுள்ள தகவல்களில் சில தெரிந்திருக்கும் இருப்பினும் கவனத்தில் வைத்துகொள்ளவேண்டிய ஒரு சில விஷயங்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் அது குழந்தையின் உயிருக்கே ஆபத்தாய் முடியும். அகவே குழந்தை பிறக்கும் சமயத்தில் குழந்தையை பார்த்துகொள்ளவேண்டியவர்கள் என்னென்ன தெரிந்துகொள்ள வேண்டும் என கவனமாக படித்து தெரிந்துகொள்ளுங்கள். 


குழந்தையின் இயல்பான மாற்றங்கள், செயல்கள்


1) குழந்தை பிறந்த நான்கிலிருந்து ஆறு மணி நேரத்திற்குள் கரும்பச்சை நிறத்தில் காட்டு மலம் மூன்று அல்லது நான்கு முறை போகும்.

2) அதன்பிறகு இரண்டாவது மூன்றாவது நாட்களில் பச்சை அல்லது பசுமை கலந்த மஞ்சள் நிறத்தில் எட்டிலிருந்து பத்து முறை மலம் போகலாம்.

3) குழந்தை பிறந்ததும் கண்டிப்பாக தாய்பால்(சீம்பால்) தர வேண்டும். தாய்பால் அருந்தும் குழந்தை முதல் இரண்டு வாரங்கள் வரை ஒவ்வொரு முறை பால் குடிக்கும்போதும் மலம் கழிக்கலாம். சில குழந்தைகள் இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு ஒரு முறையும் மலம் போகலாம்.

4) குழந்தை பிறக்கும் சமயத்திலேயே சிறுநீர் போய்விடுவதால் பல குழந்தைகளுக்கு முதல் 48 மணி நேரத்திற்கு மிக குறைவான அளவே சிறுநீர் போகும்.

5) ஒவ்வொரு முறை மலம், சிறுநீர் போகும்போதும் அழுவதும் உடலை முறுக்கி அழுவதும் சாதாரணமாக காணக்கூடிய மாற்றங்கள்தான்.

6) குழந்தை தூங்கும்பொழுது சில சமயம் வேகமாக மூச்சு எடுக்கலாம். சில குழந்தைகள் பால் குடிக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் தூங்கிகொண்டிருக்கும்.

7) சில குழந்தைகள் அடிக்கடி விழித்து அழுதுகொண்டிருக்கும் அந்த மாற்றங்களும் சாதாரணமானதே.

 

ஆனால், பின்வரும் மாற்றங்கள் இருந்தால் உடனே மருத்துவரிடம் காட்ட வேண்டும். 


இயல்புக்கு மாறான மாற்றங்கள்


1) குழந்தையின் உள்ளங்கை, கால்கள் நீல நிறமாதல் அல்லது வெளுப்பாக இருத்தல்.

2) குழந்தையின் கை கால்கள் சில்லென்று இருப்பது அல்லது அதிக சூடாக இருப்பது.

3) மஞ்சள் நிறத்தில் அல்லது தொடர்ந்து வாந்தி எடுத்தல், வயிறு உப்பி இருத்தல்.

4) குழந்தையின் உடல், முகம், கண்கள் மஞ்சளாக இருத்தல். 

5) குழந்தை சோர்ந்துபோய் பால் குடிக்காமல் இருத்தல்.

6) தொடர்ந்து வேகமாக, சிரமத்துடன் மூச்சு விடுதல் அல்லது மூச்சு திணறல் இருப்பது.


மேற் குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் இருப்பின் சற்றும் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும்.


தகவல் - www.tamil247.info

|