தமிழ் மூலிகை மருத்துவத்தின் மகத்துவம் கூறும் வலைத்தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

சாப்பிட மறுக்கிற குழந்தைகளுக்கு இதையெல்லாம் செய்து பாருங்கள்!

சாப்பிட மறுக்கிற குழந்தைகளுக்கு இதையெல்லாம் செய்து பாருங்கள்!

குழந்தைகளுக்கு என்று சில ரசனைகள் உள்ளது. ஆனால் அதை புரிந்துகொண்டு, தங்கள் குழந்தைகளை சாப்பிட வைக்க தாய்மார்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.


குழந்தைகளை சமத்தாக சாப்பிட வைக்க இதோ சில டிப்ஸ்


குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கிற பொருள் கண்ணை கவரும் வண்ணங்களாக இருக்க வேண்டும். அதாவது சிவப்பு, பச்சை போன்ற வண்ணங்களில் கொடுத்தால் குழந்தைகள் விரும்புவர்.


பெரிய கப்பில் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதை விட சிறிய கப்பில் இரண்டு முறை கொடுத்தால் போதுமானது. வெறும் பாலை கொடுப்பதை தவிறுங்கள். பாலில் ஏதாவது சொக்லெட் பவுடர் போன்றவற்றை பயன்படுத்தலாம்.


மசாலா அதிகம் உள்ள பொருள்களை குழந்தைகளுக்கு தருவது சரியானதல்ல. முதல் முறை சுவைத்ததும் அவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் பிறகு எப்போதுமே அதை விரும்ப மாட்டார்கள்.


குழந்தைகள் 2 கரட்டுகள் மேல் சாப்பிட கேட்டால் கொடுக்காதீர்கள். அப்படி ஒரே காய்கறி அல்லது பழங்களை கொடுத்தால் மற்ற சாப்பாடு உணவில் இருக்கும் சத்துக்களை அவர்கள் மிஸ் செய்வார்கள்.


தன்னை சுற்றி இருப்பவர்கள் செய்யும் விஷயங்களை செய்ய குழந்தைகள் ஆசைப்படுவார்கள். அதனால் குழந்தைகள் சாப்பிடும் போதும் பெற்றோர்கள் அவர்கள் பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிட்டால் அவர்கள் அதை விரும்புவார்கள். இதேபோல் அவர்கள் விளையாடும் போதும் அவர்களுடன் இருப்பது நல்லது.


உங்கள் குழந்தைகளின் விருப்பத்திற்கு ஏற்ப சாப்பிட கொடுங்கள். மற்றவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தருவது போல் நாமும் கொடுப்போம் என்று உங்கள் குழந்தைகளை வாட்டாதீர்கள்.


தகவல் - www.worldtamils.com

|