தமிழ் மூலிகை மருத்துவத்தின் மகத்துவம் கூறும் வலைத்தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

காதலை BREAK-UP செய்ய நினைக்கும் காதலர்களுக்கான சில ஆலோசனைகள்!

காதலை BREAK-UP செய்ய நினைக்கும் காதலர்களுக்கான சில ஆலோசனைகள்!

தலைமுறைக்கு மத்தியிலான இடைவேளை என்பது குறைந்தது 20 வருடங்களாக இருந்து வந்தது. ஆனால், இப்போது ஐந்தாறு வருடங்களுக்குள் ஓர் தலைமுறை மாற்றம் ஏற்படுவது போன்ற உணர்வு. வெறும் பத்து வருடங்களுக்குள் சமூதாயத்திலும், வாழ்வியல் முறையிலும் பெரிய மாற்றாம் ஏற்பட்டுள்ளதை யாராலும் மறுக்க முடியாது.


இப்போதெல்லாம், பழைய செருப்பை தூக்கி வீச மனமில்லாத இளசுகளை கூட பார்க்க முடிகிறது. ஆனால், காதலை "Let’s break-Up" என்று சொல்லி மிக சுலபமாக தூக்கி எறிந்துவிடுகின்றனர்.


சின்ன சின்ன காரணங்களை பெரிதுபடுத்தி, காதலை முறித்துக் கொள்ள முற்படுகின்றனர் இன்றைய இளைஞர்கள். என்னமோ, ஏதோ, நீங்கள் எக்காரணம் கொண்டு காதலை முறித்துக் கொண்டாலும், சில விஷயங்கள் மறந்தும் செய்துவிட கூடாது. அது என்னென்ன என்று இனி பார்க்கலாம்.


செய்தி, ஈ-மெயில், கால்


பிரிவது என்ற முடிவெடுத்துவிட்டால், முற்றிலுமாக குறுஞ்செய்தி, மின்னஞ்சல், அழைப்புகள் என மொத்தத்தையும் முற்றிலுமாக தவிர்த்துவிட வேண்டாம். ஏனெனில், காதலில் மறுமுனையில் இருப்பவரின் மனநிலையில் எதிர்வினை செயல்களில் ஈடுபட வாய்ப்புகள் உண்டு. எனவே, பொறுமையாக உங்கள் நிலையை எடுத்துக்கூறி, அவர்களும் புரிந்துக்கொள்ளும் படி செய்து பிரிவது தான் பிரச்சினைகளின்றி அமையும்.


நட்பு வட்டாரத்தின் தொடர்பையும் நிறுத்த வேண்டாம்


அவர்களது நண்பர்கள், அவர்களை சார்ந்த நபர்களோடும் இருக்கும் தொடர்பை உடனடியாக துண்டித்துக் கொள்ள வேண்டாம். இது, நீங்கள் பிரிய போகிறீர்கள் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தலாம். மனித உணர்வுகள் எந்த நேரத்திலும், எவ்வாறு வேண்டுமானாலும் மாறலாம். மற்றும் நீங்கள் திடீரென தொடர்புகளை நிறுத்திக் கொள்வது, அவரது வட்டத்து நபர்களுக்கு நீங்கள் தவறு செய்வது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தலாம்.


ஏமாற்ற வேண்டாம்


ஒருவேளை காதல் கசந்துவிட்டாலோ, கருத்து வேறுபாடுகள் தோன்றினாலோ, உங்கள் காதலர்/ காதலி உங்களை ஏமாற்றுகிறார் என்றாலோ, நீங்களும் அந்த நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம். இது, உங்கள் மீது தவறான மதிப்பை ஏற்படுத்திவிடும். எதுவாக இருந்தாலும், நன்கு யோசித்து, பேசி முடிவெடுப்பது தான் சிறந்த முறை ஆகும்.


பொது இடங்களில் முறிவை கூற வேண்டாம்


எந்த பிரச்சினையாக இருந்தாலும், உங்கள் இருவருக்குள் தனிமையான இடத்தில் பேசி முடிவெடுப்பது தான் சரியானது. திரைப்பட பாணியில் பொது இடங்களில் கோவத்தை காட்டி காதலை முறித்துக் கொண்டு செல்வது, ஆண், பெண் இருவரின் தனிப்பட்ட வாழ்க்கையையும் பாதிக்கும் என்பதை மறந்துவிட வேண்டாம்.


ஒட்டி உறவாட வேண்டாம்


காதல் முறிவுக்கு முன்பு கடைசியாக டேட்டிங் செல்வது, தனியாக எங்கேனும் செல்ல முயற்சிப்பதை தவிர்த்திடுங்கள். இது, ஏடாகூடமான விளைவுகளை தரலாம். எனவே, காதலில் இருந்து பிரிய முடிவெடுத்த பிறகு இவ்வாறன செயல்களில் ஈடுபட வேண்டாம்.


தகாத வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம்


காதலை முறித்துக் கொண்டு பிரியும் போது, தகாத வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம். ஒருவேளை, நீங்கள் இருவருமே மீண்டும் புரிதலின் காரணமாக இணைய வாய்ப்புகள் உண்டு. தகாத வார்த்தைகள் இதற்கு வழியே இல்லாமல் செய்துவிடும்.


தகவல் - www.tamilcnn.lk

|