தமிழ் மூலிகை மருத்துவத்தின் மகத்துவம் கூறும் வலைத்தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

ஈகோ புடிச்ச கழுதையை காதலிப்பதற்கான காரணங்கள்!

ஈகோ புடிச்ச கழுதையை காதலிப்பதற்கான காரணங்கள்!

"ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்!" ஒரு சிலர் அழகான பெண்களை காதலிக்க விரும்புவார்கள், ஒரு சிலர் நல்ல குணமுடைய பெண்களை காதலிக்க விரும்புவார்கள் இவ்வாறு, தைரியம், மனம், புத்திக்கூர்மை, ஏன் சிலர் பணம் வசதியை பார்த்து விரும்புபவர்கள் கூட இருகின்றனர். ஆனால், கோடியில் ஒருவர் தான் ஈகோ குணம் உடைய பெண்களை காதலிக்க விரும்புவார்கள் (பொண்ணுகளுக்கும், ஈகோக்கும் அர்த்தம் வேற வேறயா என்ன?).


அப்படி காதலிப்பவர்கள் ஏன் ஈகோ குணமுடைய பெண்களை காதலிக்கின்றனர் என நாம் நக்கலாக பார்த்தாலும். அதில் சில பல நல்ல விஷயம் இருக்கு. அதில் இருக்கும் கிக்கே தனி என்கின்றனர் ஈகோ புடிச்ச கழுதைகளை காதலிக்கும் நமது ஆண் சிங்கங்கள். அப்படி அவர்கள் கூறும் காரணம் என்னவென்று தெரிந்துக்கொள்ள வேண்டுமா?


புரியாத புதிர்


சுவாரஸ்யம் உள்ள வரை தான் எந்த ஒரு உறவும் நீடிக்கும். அந்த வகையில் ஈகோ பிடித்தவர்கள் அவ்வளவு சீக்கிரமாக தங்களை பற்றிய ரகசியங்களை கசியவிடமாட்டார்கள். இதனால், இவர்களுடன் ஆனா உறவு மிகவும் சுவாரசியமாக இருக்கும் என்கின்றனர் அவ்வாறான பெண்களை காதலிக்கும் இளசுகள்.


முதிர்ச்சி


இவர்கள் நீங்கள் சொல்வதற்கு எல்லாம் தலையாட்டும் தஞ்சாவூர் பொம்மையாக இருக்கமாட்டார்கள். அடம் பிடிக்க மாட்டார்கள். இவர்களுடனான காதல் முதிர்ச்சியானதாக இருக்கும்.


உணர்வுகளை புரிந்து இருப்பார்கள்


தங்களை பற்றி நன்கு அறிந்து வைத்திருக்கும் இவர்களால், மற்றவர் பற்றியும் நன்றாக புரிந்துக்கொள்ள முடியும். இதனால் காதலர்களது நிலையையும் புரிந்துக் கொண்டு உணர்வுகளை மதிக்க தெரிந்தவர்களாக இருப்பார்கள்.


ஏமாற்ற மாட்டார்கள்


கொஞ்சம் கடினமான உறவாக இருந்தாலும், புரிதலும், உணர்வும் சரியான விகதத்தில் இருக்கும். இவர்கள் ஒருவரை ஒருவர் ஏமாற்ற மாட்டார்கள்.


தனிமைக்கு இடம் கொடுப்பார்கள்


எந்நேரமும் காதலில் கூடலில் இருக்க முடியாது. தனிமை வேண்டும் என்ற நேரங்களும் வரும். அந்த நேரங்களில் காதலியோ அல்ல காதலனோ புரிந்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால் இந்த குணம் படைத்தவர்கள். அவர்களது தனிமைக்கான காரணத்தை புரிந்துக் கொண்டு அதற்கான நேரத்தை தருவார்களாம்.


நன்கு பேசுவார்கள்


காதலில் பெருவாரியாக பெண்கள் பேசும் வார்த்தைகளே "ஹ்ம்ம், அப்பறம், சொல்லு" என்ற இந்த மூன்று தாரக மந்திரங்கள் தான். இதனாலேயே காதலை விட்டு துறவியாக சென்ற பல ஆண்மகன்கள் உண்டு. ஆனால், ஈகோ குணம் உடைய "தான்… தான்…" என்று பேசும் பெண்கள் எக்கச்சக்கமாய் பேசுவார்களாம்! (ச்சீ.. எப்படியா காது கொடுத்துக் கேக்கிறீங்க!!!)


திருமணம் வரை உறவு தொடரும்


இப்போதெல்லாம் ஆண்களை விட பெண்கள் தான் இடையிலேயே கழற்றிவிடுகின்றனர் என பரவலாக கூறப்படுகிறது. ஆனால், இந்த ஈகோ குணம் உடைய பெண்கள் தங்களது முடிவில் கடைசி வரை ஒரே பிடியாக இருப்பார்கள் எனவே இந்த உறவு திருமணம் வரை செல்லும் என்பதில் நீங்கள் உறுதியாக இருக்கலாம்.


தகவல் - www.ntamil.com

|