தமிழ் மூலிகை மருத்துவத்தின் மகத்துவம் கூறும் வலைத்தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

திருமணத்தை எதிர்நோக்கும் பெண்களின் மனதில் தோன்றும் அச்ச உணர்வுகள்!

திருமணத்தை எதிர்நோக்கும் பெண்களின் மனதில் தோன்றும் அச்ச உணர்வுகள்!

நம்மிடம் எப்போதுமே ஒரு கெட்ட குணம் இருக்கும். நம் வாழ்க்கையில் 90% சந்தோசமாக இருந்தாலும், மீதமுள்ள 10% துன்பத்தை எண்ணியே மகிழ்ச்சியை இழந்துவிடுவோம். திருமண வாழ்விலும் அப்படி தான். திருமணம் நெருங்க, நெருங்க பெண்களுக்கு ஏற்படும் அச்சங்கள் அதிகரிக்கும். அவை என்னவென்று பார்க்கலாம்.


மாமனார். மாமியார், நாத்தனார் என கணவன் வீட்டு உறவுகள் எப்படி நடந்துக் கொள்வார்கள், தங்களை எப்படி நடத்துவார்கள் என்ற பயம் எல்லா பெண்களுக்குமே திருமணத்திற்கு முன்பு ஏற்படுகிறது.


எல்லா வேலைகளையும் உடனக்குடன் செய்ய வேண்டும். காலை எழுந்து சமைப்பதில் இருந்து, வேலைக்கு கணவனை அனுப்புவது, தான் வேலைக்கு செல்வது, அலுவலக வேலைகள், மீண்டும் வீடு திரும்பி வீட்டு வேலைகள் என நேரம் மற்றும் வேலை மேலாண்மை தடைப்படுமா? என்ற அச்சமும் இருக்கிறது.


இதுநாள் வரை தான், தன் வாழ்க்கை என்று இருந்த ஓர் சுழற்சியில் இன்று நாம், நம் வாழ்க்கை என்ற மாற்றம் நிகழ போகிறது. தாம்பத்தியம் முதல், கணவன் மனைவி மத்தியில் ஏற்படும் பல்வேறு உணர்வுகள் எப்படி இருக்கும் என்ற அச்சம் பெண்கள் மத்தியில் இருக்கிறது.


தோழிகள், நண்பர்கள், வேலை, உடன் பணிபுரிவோர் என தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏதேனும் பாதிப்பு வருமோ என்ற பயம் பெண்களுக்குள் வலுவாக இருக்கிறது. ஏனெனில், கணவனுக்கு பணிமாற்றம் ஆனால், தானும் பனி மாற்றம் வாங்கி செல்ல வேண்டும், அல்லது வேலையே விட்டு செல்ல வேண்டும் என்ற ஒருதலைப்பட்சமான நிபந்தனை நமது சமூகத்தில் நிகழந்து வருகிறது.


இல்லறம், கணவன், மனைவி உறவு என்பதை தாண்டி, பொருளாதாரம், வளர்ச்சி, குடும்ப வரவு, செலவுகளை கண்காணிப்பது போன்றவை பற்றியும் பெண்கள் மத்தியில் ஓர் அச்சம் நிலவுகிறது.


வீடு, நிலம், வாகனம் வாங்குவது, சேமிப்பு, என எதிர்கால திட்டங்கள் அவர்களின் மனதில் குழப்பமாக எழும். ஆரம்பத்தில் எல்லா பெண்கள் மத்தியிலும் இதுபோன்ற சில தடுமாற்றங்கள் எழுவது இயல்பு தான்.


தாம்பத்தியம் மற்றும் குழந்தை பெற்றுக் கொள்வதிலும் பெண்கள் அச்சம் கொல்வதுண்டு. குழந்தை பிறந்தால் அதிக லீவு எடுக்க வேண்டியிருக்கும் என்பதால் குழந்தையை தள்ளிப்போடலாமா என்று எண்ணம் இன்றைய பெண்கள் மத்தியில் அதிகளவு உள்ளது.


திருமணம், நெருங்க, நெருங்க, “இப்பவே கல்யாணம் பண்ணி ஆகணுமா?” என்ற கேள்வியும் சில பெண்கள் மத்தியில் அச்சம் காரணமாக எழுகிறது. இவ்வாறு பல்வேறு காரணங்களை காட்டி பெண்கள் தங்கள் திருமணத்தை தள்ளிபோட நினைக்கிறார்கள்.


இன்றைய காலகட்டத்தில் பல்வேறு பிரச்சினைகளை சமாளிக்கும் திறமை உள்ள பெண்கள் எளிதான இனிமையான பிரச்சினைகள் உள்ள திருமண வாழ்க்கையை தவிர்ப்பதற்கு தங்களுடைய சுதந்திரம் பறிபோய் விடும் என்பதே முதன்மையான காரணமாகும்.


தகவல் -  http://www.tamildoctor.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/