தமிழ் மூலிகை மருத்துவத்தின் மகத்துவம் கூறும் வலைத்தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

முகத்தை பளபளப்பாக பேண சில ஆலோசனைகள்!

முகத்தை பளபளப்பாக பேண சில ஆலோசனைகள்!

நமது அன்றாட வாழ்வில் 24 மணி நேரம் என்பது போதுமானதாக இல்லை, எப்போதும் ஒரே பரபரப்பு ஒரே ஓட்டம் தான், இதை தான் ஆங்கிலத்தில் Machine Life என்று சொல்லுவார்கள்.

இதை போல் நாம் உட்கொள்ளும் உணவும் வேகமாகவே நடைபெறுகிறது. இதனால் நமது சருமம் சுருங்கி இளம் வயதினர் கூட பெரியவர்கள் மாதிரி தோன்றுகிறார்கள்.


நேரங்கெட்ட நேரத்தில் வேலை, காலையில் தூங்கி மாலையில் கண்விழிக்கும் கலாசாரம் என நகரத்தில் பெரும்பாலோர் வாழ்க்கை நரக வாழ்க்கையாகி மாறி வருகிறது. பாஸ்ட்புட் உண்ணுவதாலும் உடலுக்கு தேவையான சரிவிகித சத்துக்கள் கிடைக்காமல் போய் இளமையிலேயே முதுமையான தோற்றத்தை அடைகின்றனர் இளம் தலைமுறையினர்.

இதற்கு தீர்வு காண ஒரு சிறந்த முறை நாம் சாப்பிடும் உணவு முறையை மாற்றி கொண்டால் போதும்.


1) காய்கறி மற்றும் பழங்களை அதிகம் உண்ண வேண்டும். ஏனெனில் இதில் வைட்டமின் சத்து அதிகம் உள்ளதால் முகச்சுருக்கத்தைப் போக்கும்.


2) கறிவேப்பிலையிலுள்ள வைட்டமின் ஏ இளமையான சருமத்தைத் பராமரிக்கும், அடிக்கடி துவையல் செய்து சாப்பிட்டால் முகச்சுருக்கம் அறவே போய்விடும்.

 

3) இளமைக்குப் பாதுகாப்பு தரும் துவர்ப்பு சுவை கொண்ட வாழைப்பழம், வாழைத்தண்டு, நெல்லிக்காய் போன்ற துவர்ப்பு சுவையுள்ள உணவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.


4) வெந்தயக் கீரையை பாசிப்பருப்பு, சீரகம் சேர்த்து வேகவைத்து மசித்து வாரத்தில் 2 அல்லது 3 தடவை சாப்பிட்டு வந்தால் உடல் குளுமையடையும், அது மட்டுமின்றி முகச் சுருக்கமும் மறையும். வாரத்திற்கு இரண்டு தடவை ஆரஞ்சு மற்றும் கரட் ஜூஸ் குடித்து வந்தால் சருமம் பொன் நிறமாகும்.

 

5) நல்லெண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் இரண்டையும் சம அளவு கலந்து முகம் மற்றும் உடல் முழுவதும் தடவி, சிறிது ஊறவிட்டு கடலை மாவினால் தேய்த்துக் கழுவி வர முகம் புத்துணர்ச்சியடையும்.


6) இதே முறையை ஆலிவ் எண்ணெய் அல்லது சுத்தமான தேங்காய் எண்ணெயை பயன்படுத்தியும் செய்யலாம் முகத்தில் இளமையாகவே இருக்கும்.


தகவல் - beautytips-tamil.blogspot.ca

|