தமிழ் மூலிகை மருத்துவத்தின் மகத்துவம் கூறும் வலைத்தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

பாதங்களை மென்மையாக்கும் ஸ்க்ரப்!

பாதங்களை மென்மையாக்கும் ஸ்க்ரப்!

இறந்த செல்கள், உடலில் பெரும்பலான இடங்களில் வியர்வை மூலமாக வெளியேறுகின்றன. ஆனால் முகம், உதடு, பாதங்களில் அதிகமாய் வியர்க்காததால், அங்கேயே தங்கி சருமத்தை பாதிப்படைய வைத்துவிடும். எனவே முக்கியமாய் இந்த இடங்களில் ஸ்க்ரப் செய்வது மிகவும் அவசியமாகி விடுகிறது.


பாதங்களில் இறந்த செல்கள் மற்றும் கொழுப்பு படிவங்கள் தங்கி, கடினத்தன்மையை ஏற்படுத்தும். இவைகளை தினமும் குளிக்கும்போது நீக்கிவிட வேண்டும். இல்லையென்றால் வெடிப்பு ஏற்பட்டு, பாதத்தை அசிங்கமாக்கும்.


வலி உண்டாகும். இதற்கான இந்த ஸ்க்ரப் வாரம் மூன்று முறை உபயோகியுங்கள். பாதத்தில் வெடிப்பு மறையும். பட்டுப் போன்று மென்மையான பாதம் கிடைக்கும்.


தேவையானவை


உப்பு - 5 தேக்கரண்டி 

பாதாம் எண்ணெய் - கால் கப்

லாவெண்டர் எண்ணெய் - 3 துளிகள்.


இவற்றை நன்றாக கலக்கி, பாதங்களில் தேய்த்து, 20 நிமிடங்கள் ஊற விடுங்கள். பின் வெதுவெதுப்பான நீரில் கழுவவும். பாதங்களில் வெடிப்பு மறைந்து மென்மையாகும். 


தகவல் - www.maalaimalar.com

|