தமிழ் மூலிகை மருத்துவத்தின் மகத்துவம் கூறும் வலைத்தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கக்கூடிய சில உணவுகள்!

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கக்கூடிய  சில உணவுகள்!

உங்கள் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை கட்டுப்பாட்டில் வைக்க பல உணவுகள் உதவும். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை பராமரிக்க அவ்வகையான உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உதவும். இதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும். இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவுகளை பராமரிக்க உதவும் சில சிறந்த உணவுகளை பற்றி பார்க்கலாம்.


இலவங்கப்பட்டை

ஓட்ஸ் அல்லது ஒயின் போன்ற உணவில் இலவங்கப்பட்டையை சேர்க்கும் போது கண்டிப்பாக அவை சுவையாக இருக்காது. ஆனால் இதில் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை பராமரிக்க பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது. சிலோன் இலவங்கப்பட்டை சர்க்கரை அளவை குறைக்க உதவுவதோடு, கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கவும் உதவுகிறது. அதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அதிகரிப்பதை தடுக்க இது சிறந்த உணவாக செயல்படுகிறது.


ஓட்ஸ்

ஓட்ஸில் ஆரோக்கியமான நார்ச்சத்து நிறைந்துள்ளது. இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை பராமரிக்க உதவும் சிறந்த ஊட்டச்சத்துக்கள் இதிலும் அடங்கியுள்ளது. நார்ச்சத்து உங்கள் உடலின் உறிஞ்சும் வீதத்தை குறைக்கும். இதனால் கார்போஹைட்ரேட் மிக மெதுவாக குளுக்கோஸாக மாறும். கூடுதலாக, ஓட்ஸில் உள்ள பீட்டா-க்ளுகன் இன்சுலின் உணர்ச்சி அளவை மேம்படுத்தும்.


வெந்தயம்

உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவும் சிறந்த உணவுகளில் இதுவும் ஒன்றாகும். டைப் 1 மற்றும் டைப் 2 வகை சர்க்கரை நோய்களை கொண்டவர்கள் தங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க இது உதவும்.

இதெற்கெல்லாம் காரணமாக இருப்பது இந்த விதையில் உள்ள அளவுக்கதிகமான நார்ச்சத்து ஆகும்.


சால்மன் 

சால்மன் மீனில் புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளது. மேலும், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை பராமரிக்கும் முக்கியமான ஊட்டச்சத்துக்களில் ஒன்றான வைட்டமின் டி அதில் உள்ளது.


வைட்டமின் டி குறைபாடு, டைப் 2 வகையிலான சர்க்கரை நோயுடன் நெருங்கிய தொடர்பை கொண்டுள்ளது. அதனால் வைட்டமின் டி அளவை அதிகரிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். சால்மன் மீனில் உள்ள ஒமேகா-3 கொழுப்பமிலங்களும் கூட உங்களை இதய நோயில் இருந்து பாதுகாத்து, இன்சுலின் எதிர்ப்பினால் ஏற்படும் வீக்கத்தை குறைய வைக்கும்.


பூண்டு 

பூண்டு என்பது பல உடல் நல பயன்களை அளிப்பது என்பது நாம் அனைவருக்கும் தெரிந்ததே. அதனோடு சேர்த்து இரத்தத்தில் உள்ள சர்க்கரை பிரச்சினையை போக்கவும் அது உதவும். முயல்களின் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த பூண்டு சிறப்பாக உதவுகிறது என்பதை பல ஆய்வுகள் கண்டுபிடித்துள்ளது. பூண்டில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்ம் சல்ஃபரும் அதிகமாக உள்ளது.


பாதாம் 

வைட்டமின் ஈ மற்றும் ஆரோக்கியமான நார்ச்சத்து நிறைந்துள்ள உணவு தான் பாதாம். இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை பராமரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளது. இரும்புச்சத்து, ஜிங்க் மற்றும் புரதம் போன்ற ஊட்டச்சத்துக்கள் குளுகோஸை கட்டுப்பாட்டில் வைக்க உதவும். பாதாமில் காணப்படும் அதிக நார்ச்சத்து, நீங்கள் உண்ணும் கார்போஹைட்ரேட்டுகளை மெதுவாக செரிக்க வைக்கும். மேலும் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தவும் அது உதவும்.


தகவல் - www.tamilkurinji.net

|