தமிழ் மூலிகை மருத்துவத்தின் மகத்துவம் கூறும் வலைத்தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

மஞ்சளினால் கிடைக்கும் நன்மைகள்!

மஞ்சளினால் கிடைக்கும் நன்மைகள்!

மஞ்சள் ஒரு மங்கலகரமான பொருள். எந்தவொரு சுப காரியத்தை ஆரம்பித்தாலும் மஞ்சள் தடவிய பின்னரே ஆரம்பிப்போம். திருமணத்தின்போது மஞ்சளுக்கு தனி சிறப்பிடம் கொடுக்கிறோம். திருமண அழைப்பிதழின் ஓரங்களில் மஞ்சள் தேய்ப்பதோடு, மணமக்கள் மீது அட்சதை தூவும்போதும் அரிசியுடன் மஞ்சளையும் கலந்துகொள்கிறோம். வசதி படைத்தவர்கள் தங்கத்தால் தாலி செய்து கொள்கிறார்கள். ஆனால், பணம் இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்? அவர்களுக்கு அப்போதைய தங்கம் இந்த மஞ்சள்தான். அதை ஒரு மஞ்சள் கயிற்றில் கட்டி தாலியாக பயன்படுத்துகிறார்கள்.


திருமணம், கோவில் விழாவின்போது மஞ்சள் பொடியை காற்றில் தூவும் வழக்கம் உண்டு. இவ்வாறு செய்வதால், அந்த கூட்டத்தில் மாசு கலந்த காற்று சுத்தமான காற்றாக மாறுகிறது. இதனால் தான், சில இடங்களில் மணமக்களுக்கு மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியும் நடத்துகிறார்கள். கோவில்களில் மஞ்சள், திருமஞ்சனத்தால் சாமி சிலைகளுக்கு அபிஷேகம் நடைபெறுவதை காண்கிறோம். சாமி சிலைகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட மஞ்சள் நீரை தீர்த்தமாக பருகும்போது, நம் உடலில் நோய்களை உருவாக்கும் கிருமிகள் அழிகின்றன. இதனால் ஆரோக்கியம் கிடைத்து ஆயுளும் நீள்கிறது.


இன்னும் ஒரு உதாரணம். 


அம்மன் கோவில் திருவிழாவின்போது விரதம் மேற்கொள்ளும் ஆண்கள், பெண்கள் மஞ்சள் துணி அணிந்திருப்பதை காண்கிறோம். இவ்வாறு மஞ்சள் ஆடை அணியவும் காரணம் இருக்கிறது. மஞ்சள் ஆடை அணிவதால் உடலில் உள்ள வெப்பம் அகற்றப்பட்டு, மனதில் அலை பாய்ந்து கொண்டிருக்கின்ற கொடிய எண்ணங்களில் இருந்தும் விடுபடுகிறோம்.


மருத்துவ பயன்கள்


1) குழந்தை இல்லாத பெண்கள், மாதவிலக்கு சமயம் அந்த 3 நாட்களும் ஒரு அவுன்ஸ் தண்ணீரில் 4 சிட்டிகை சுத்தமான மஞ்சள் பொடியை கலக்கி வெறும் வயிற்றில், மதியம், மாலை என்று மூன்று வேளையும் சாப்பிட்டு வந்தால் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தைப்பேறு கிடைக்கும்.


2) பெண்களின் தோல் பகுதி மிகவும் மென்மையானது. அதனால் கிருமி தொற்றுதலுக்கு எளிதில் ஆளாகும் வாய்ப்புகள் அவர்களுக்கு அதிகம் உண்டு. அதனால் தான், பெண்களை மஞ்சள் தேய்த்து குளிக்கச் சொல்கிறோம்.


3) சைவம் ஆனாலும் சரி, அசைவம் ஆனாலும் சரி, மஞ்சள் சேர்த்து தயாரிக்கப்படும் உணவு பொருட்களில் விஷத்தன்மை ஏற்படாது.


4) பாதாம் பாலுடன் கஸ்தூரி மஞ்சள் சிறிது சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கு ஆண்மை சக்தி பெருகும்.


5) மூலம், பவுத்திரத்தால் அவதிப்படுபவர்கள் ஒரு டீஸ் பூன் வெண்ணெயில் சிறிது மஞ்சள் பொடியையும் கலந்து, அந்த கலவையை உள் மூலத்திற்கும், வெளிமூலத்திற்கும் தடவி வந்தால் நாளடைவில் நல்ல குணம் கிடைக்கும்.


6) குளிக்கும் தண்ணீருடன் சிறிதளவு மஞ்சள் பொடியையும் சேர்த்து கலக்கி, அதை சூரிய ஒளியில் வைத்து, சிறிதுநேரம் கழித்து குளிப்பது நல்லது. சூரியஒளி சக்தியினால் மஞ்சள் மேலும் வீரிய சக்தி பெற்று நோயை தடுக்கும் மருந்துபோல் செயல்படுகிறது. அம்மை நோய்க்கு மட்டுமல்ல, சாதாரண நாட்களிலும் ஆண்-பெண் இருபாலரும் இப்படி மஞ்சள் தண்ணீரில் குளிக்கலாம்.


7) மஞ்சளையும், சந்தனத்தையும் கலந்து நெற்றியில் திலகமிட்டால் அடிக்கடி டென்ஷன் ஆகுபவர்கள் அதில் இருந்து விடுபடுவார்கள். மனதில் கெட்ட எண்ணங்கள் இருந்தால் விலகிவிடும். மூளை, நரம்பு மண்டலம் அப்போது குளிர்ச்சி அடைவதே இதற்கு காரணம்.


8)  மஞ்சள் பொடியை உடலில் பூசி குளிப்பதால் கவர்ச்சியான நிறத்தை பெறலாம். அதாவது தோல் பளபளப்பாகும். இதனால்தான் ஹோலி பண்டிகையின்போது மஞ்சள் தூவி விளையாடுகிறார்கள்.


9) தொற்றுநோய் உள்ள பகுதியில் மஞ்சள் நீரையோ, மஞ்சள் பொடியையோ தெளித்து வந்தால், அந்த நோய் மற்ற பகுதிகளுக்கு பரவாது. வந்த பகுதியிலும் அதை கட்டுப்படுத்தலாம். வீட்டு வாசலில் மஞ்சள் கொத்தை கட்ட காரணமும் இதுதான்.


10) ஈக்களின் தொல்லையை கட்டுப்படுத்த, மஞ்சள் நீரில் துளசி இலைகளை தேவையான அளவு சேர்த்து கலந்து, ஈ உள்ள பகுதிகளில் தெளித்து வந்தாலே போதும். ஈக்கள் தொல்லை குறைந்து விடும்.


11) தொடர்ச்சியான இருமல் உள்ளவர்கள் சூடான பாலில் சிறிது மஞ்சள் பொடியை கலந்து தினமும் 3 வேளை வீதம் பருகி வந்தால் இருமல் காணாமலேயே போய்விடும்.


12) சுட்ட அல்லது வறுத்த மஞ்சள் பொடியை பாலில் சிறிதளவு கலந்து சில நாட்கள் தொடர்ச்சியாக பருகி வந்தால் மேக நோய் குணமாகும்.


மஞ்சளில் இனிய இல்லறம்


முன்பெல்லாம் பெண்கள் குளிக்கும்போது மஞ்சளை உபயோகிக்க மறக்க மாட்டார்கள். அந்த மஞ்சள் தரும் இயற்கை அழகில் மினுமினுத்தார்கள். ஆனால், இன்றோ அதன் நிலை தலைகீழாக மாறிவிட்டது.


இன்றைய நவநாகரீக பெண்களுக்கு மஞ்சள் என்றால் என்ன என்று பாடம் எடுத்தால் தான் புரிகிறது. அவர்களை மஞ்சள் பூசி குளிக்க என்று சொன்னால், "எவ்வளவோ பியூட்டி சோப்புகள், ஸாம்புகள் இருக்கும்போது மஞ்சள் எதுக்கு?"  என்று திருப்பிக் கேட்கிறார்கள். உண்மையிலேயே மஞ்சளைப் போன்ற இயற்கையான அழகு சாதனம் வேறு எதுவுமே கிடையாது.


பெண்களை இயற்கை அழகை மிளிரச் செய்யும் இதே மஞ்சள் தான், இனிய இல்லறத்திற்கும் காரணமாகிறது.


இன்றைய காலக்கட்டத்தில் ஆண்மைக் குறைவு, நரம்பு தளர்ச்சி போன்ற குறைபாடுகளால் ஏராளமான கணவன்மார்கள் சிக்கி தவிக்கிறார்கள். இவர்களால் இனிமையான இல்லறத்தை அனுபவிக்க முடியவில்லை. இப்படிப்பட்டவர்களின் மனைவிமார்கள் தினமும் மஞ்சள் பூசி குளித்தாலே, அவர்களின் இந்த குறைபாடு நீங்கி விடும்.


தகவல் - arokiyacharal.blogspot.ca

|